தமிழ்

SuicideLine Victoria என்பது, தற்கொலையினால் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் மன நலப் பிரச்சினைகளை அனுபவிக்கும் எவருக்குமான மாநில-அடிப்படையிலான ஒரு தொலைபேசி ஆலோசனை சேவையாகும்.

 

பின்வருவோருக்குச் சேவையாற்றும் தொழில்வாண்மை பெற்ற ஆலோசகர்களை SuicideLine Victoria  தனது பணியாளர்களாகக் கொண்டுள்ளது:

 

  • தற்கொலை பற்றிச் சிந்திக்கும் எவருக்கும்
  • ஆபத்தில் உள்ள ஒருவரைப் பற்றிக் கவலைப்படும் எவருக்கும்
  • தற்கொலை செய்து கொள்ளும் உணர்வுடனுள்ள ஒருவரில் அக்கறை கொண்டுள்ள எவருக்கும்
  • நெருக்கமான ஒருவரின் தற்கொலையினால் துயருற்ற எவருக்கும்
  • உணர்வுசார் அல்லது மனநலப் பிரச்சினைகள் உள்ள எவருக்கும்

இலவசமான இச்சேவையானது,  விக்டோரியாவில் வசிக்கும் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்குக் கிடைக்கத்தக்கதாக உள்ளது.

 

இச் சேவையானது ஒரு நாளின் 24 மணித்தியாலங்களும், ஒரு வாரத்தின் ஏழு நாட்களிலும் வழங்கப்படுகின்றது.

 

ஒரு ஆலோசகருடன் பேசுவதற்கு, 1300 651 251 -ஐ அழைக்கவும்.

 

மொழிபெயர்ப்புச் சேவை

 

ஆங்கிலம் பேசாத எவருக்கும் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புச் சேவை (TIS) வழங்கப்படுகின்றது. நீங்கள் SuicideLine Victoria -ஐத் தொலைபேசியில் அழைக்கும்போது, ஒரு மொழிபெயர்ப்பாளரை வழங்குமாறு நீங்கள் கேட்கலாம். ஆலோசகர் உங்களைச் சற்று நிறுத்தி வைத்து, பின்னர் ஒரு மாநாட்டு அழைப்பில் ஒரு மொழிபெயர்ப்பாளருடன் மீண்டும் இணைப்பார். அன்றேல், நீங்கள் 131 450 -இல் TIS -ஐ அழைத்து,  SuicideLine Victoria -ஐத் தொலைபேசியில் அழைக்குமாறு கேட்க முடியும்.